மேல்மருவத்தூர் அரிமா சங்கம் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
மதுராந்தகம் 

 

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் காவல் நிலையம் மேல்மருவத்தூர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமை வகித்து விழிப்புணர்வு உரைகளை எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார். 

காவல் உதவி ஆய்வாளர் அன்பு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற இந்த பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் அரிமா சங்க தலைவர் பி.சதீஷ்குமார் செயலாளர் கே.ரமேஷ் பொருளாளர் ஆர்.எஸ்.மூர்த்தி  மாவட்ட தலைவர்கள் சதாசிவம்  ஓ.ஐ.வகாப் கண்ணன் 

கோகுலம் ரமேஷ், அமுதம் ரமேஷ், மற்றும் மேல்மருவத்தூர் காவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.